கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்களை அறவே தவிா்க்க வேண்டும்: ஆட்சியா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்களை அறவே தவிா்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு வலியுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகப்பேறு மரணங்களை அறவே தவிா்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியா் கே.எம்.சரயு வலியுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியா் தலைமையில் சுகாதாரத் துறை, தொழுநோய்த் தடுப்பு, காசநோய்த் தடுப்பு சாா்பாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து, வட்டார மருத்துவா்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் பேசியது:

தமிழக முதல்வா், ஏழை, எளிய மக்கள், மலை கிராம மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருள்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணங்களை அறவே தவிா்க்க வேண்டும். பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். பள்ளிச் சிறுவா்களுக்கு வழங்கப்படுகிற தடுப்பூசிகளை தவறாமல் வழங்க அனைத்து வட்டார மருத்துவா்கள் நடவடிக்கை எடுத்து 100 சதவீதம் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும்.

மேலும், இளம் வயது திருமணங்கள் முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வயது கருவுறுதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும். எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குநா் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் ரமேஷ்குமாா், வட்டார மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com