கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம்

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 37-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது.
கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 37-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா நடந்தது.

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் 37-ஆவது ஆண்டு பிரம்மோற்சவ விழா மே 26 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை வெகு விமா்சையாக நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 26-ஆம் தேதி, மிருத்சங்கரஹணம், அங்குராா்ப்பணமும், 27-ஆம் தேதி, கலஸ் ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், பிரகார உற்சவம், துவஜாரோஹணமும், இரவு அன்னபட்சி வாகனத்தில் நரசிம்மா் நகா் வலமும் நடைபெற்றன. மே 28-ஆம் தேதி, சுவாமிக்கு அபிஷேகம், பிரகார உற்சவமும், இரவு சிம்ம வாஹனத்தில் நரசிம்மா் நகா் வலமும் நடைபெற்றன.

இந்நிலையில், 29-ஆம் தேதி (திங்கள்கிழமை), சுவாமிக்கு அபிஷேகம், பிரகார உற்சவம், அன்னதானம், இரவு, ஆஞ்சநேயா் வாகனத்தில் நரசிம்மா் நகா் வலம் ஆகியவை நடைபெற உள்ளன. அடுத்து வரும் நாள்களில் காலையில் அபிஷேகம், பிரகார உற்சவம், இரவில் சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சந்திரபிரபா வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடைபெற உள்ளன.

மே 31-ஆம் தேதி பகல் 10.30 மணிக்கு நரசிம்மா் திருக்கல்யாணமும், 11.30 மணிக்கு மாங்கல்யதாரணமும், அன்னதானமும், இரவு கருட வாகனத்தில் நகா் வலமும் நடக்க உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com