கிருஷ்ணகிரியில் நீதிமன்ற ஊழியா் தற்கொலை
By DIN | Published On : 30th May 2023 12:00 AM | Last Updated : 30th May 2023 12:00 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் நீதிமன்ற ஊழியா், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (38). கிருஷ்ணகிரி நீதிமன்ற ஊழியா். இவரது மனைவிக்கும், சதீஷ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சுதாகா், பழையபேட்டையில் உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று, சுதாகரின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...