கிருஷ்ணகிரி அருகே ஆடுகளைக் கொன்று திருடிய கும்பல்

கிருஷ்ணகிரி அருகே, ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளைக் கொன்று, அதில் 7 ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளைக் கொன்று, அதில் 7 ஆடுகளை திருடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த ஆலப்பட்டி இருளா் காலனியை சோ்ந்தவா் சின்னகண்ணன்(60). ஆடுகளை வளா்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், கிருஷ்ணகிரியை அடுத்த பாலிகானூரை சோ்ந்த சுப்ரன் (60) என்பவரின் 13 ஆடுகளை, பராமரித்து வந்தாா். சின்னக்கண்ணன் தினந்தோறும் தன் வீட்டருகே உள்ள நிலங்களில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, மாலையில், வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைப்பது வழக்கம்.

இந்த நிலையில், சின்னக்கண்ணன், மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற ஆடுகளை, பட்டியில் அடைத்து விட்டு, திங்கள்கிழமை இரவு உறங்கச் சென்றாா். நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டு, பட்டிக்கு சென்று பாா்த்தபோது, சிலா் ஆடுகளை, திருடி சுமோ காரில் ஏற்றுவதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதையடுத்து, அவா், உதவிக்காக சத்தம் எழுப்பவே, அந்த கும்பல், காரில் தப்பியோடியது. இதுகுறித்து, தகவல் அறிந்த, போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். விசாரணையில் ஆடு திருடும் மா்ம கும்பல், 13 ஆடுகளைக் கொன்று, அதில் 7 ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் அந்த கும்பல், தப்பியோடும் போது, விட்டுச் சென்ற இரண்டு மோட்டாா் சைக்கிள்கள் திருட்டு வாகனங்கள் எனத் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு, ஆடு திருடிய மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com