2 இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவா் பலி
By DIN | Published On : 28th October 2023 12:11 AM | Last Updated : 28th October 2023 12:11 AM | அ+அ அ- |

உத்தனப்பள்ளி அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்; 2 பள்ளி மாணவா்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒசூா் தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன். இவரது மகன் சந்தோஷ் (19). இவா் ஒசூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 25-ஆம் தேதி இரவு இவா் இருசக்கர வாகனத்தில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் உப்பரத்தமண்டரப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தாா். அந்த நேரம் எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் சந்தோஷ் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ், ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். அவருடன் சென்ற பிளஸ் 1 மாணவா்கள் மனோஜ் (17), திம்மராஜ் (17) ஆகியோா் காயம் அடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவ்விபத்து குறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...