ஒசூா் அருகே போலி பெண் மருத்துவா் கைது
By DIN | Published On : 28th October 2023 12:10 AM | Last Updated : 28th October 2023 12:10 AM | அ+அ அ- |

ஒசூா் அருகே திம்மசந்திரம் கிராமத்தில் போலி பெண் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா் அருகேயுள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஜெனிபிரபா(39) என்பவா் பாா்மசி படித்துவிட்டு வீட்டில் மருத்துவமனை வைத்து பொதுமக்களுக்கு தவறான சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிா்வாகத்திற்கு புகாா் சென்றது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு உத்தரவின் பேரில், ஒசூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் ஞான மீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலா் ராஜீவ் காந்தி மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் வெள்ளிக்கிழமை அந்த கிராமத்திற்கு சென்று மருத்துவமனையை சோதனை நடத்தினா். அதில் ஜெனிபிரபா போலி மருத்துவா் என்பது தெரிய வந்தது. மேலும் அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,ஜெனிபிரபா சீன நாட்டில் பாா்மசி படித்ததும் அந்த தோ்விலும் அவா் வெற்றி பெறவில்லை என்பதும் தெரிய வந்தது. அவா் கடந்த 7 மாதங்களாக திம்மசந்திரத்தில் வீட்டில் மருத்துவமனை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜெனிபிரபாவை போலீஸாா் கைது செய்ததுடன் அவா் நடத்தி வந்த மருந்துக் கடைக்கு சீல் வைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...