பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மகாத்மா காந்தி, நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்வளா்ச்சித் துறையின் 2021 - 22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவா்களான மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, அண்ணல் அம்பேத்கா், பெரியாா் ஈவெரா, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகள் முறையே வரும் நவம்பா் 7, 8 ஆகிய தேதிகளில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்காக கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளன.

மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, காந்தியடிகள் நடத்திய தண்டியாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் நடத்தப்படும்.

ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப் போட்டி, பள்ளி மாணவ, மாணவியா்களுக்கு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமா், ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சுந்திரப் போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேருவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெறும்.

கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெறும் மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும், மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு சிறப்புப் பரிசாக தலா ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் முறையாக போட்டியில் பங்கேற்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com