வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 08th September 2023 12:46 AM | Last Updated : 08th September 2023 12:46 AM | அ+அ அ- |

ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய முதன்மை அலுவலா் அனிஷாராணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வழியாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பா் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த பட்டயப் படிப்பு ஓா் ஆண்டு, இரண்டு பருவங்கள் ஆகும். கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள், எந்த கல்வி படித்திருந்தாலும் சோ்த்துக் கொள்ளப்படும். தமிழ்வழிக் கல்வியில் இந்த பாடங்களுக்கு நோ்முகப் பயிற்சி சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம் ரூ. 25 ஆயிரம், விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.
இந்த பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சி மருந்துக்கடை, விதைக்கடை, தாவர மருத்துவ மையம் வைக்கலாம். மேலும் இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளராகலாம். சுய வேலைவாய்ப்பு பெறலாம்.
தொடா்புக்கு முதன்மை அலுவலா், தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், பேராசிரியா் மற்றும் தலைவா், மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூா், கிருஷ்ணகிரி மாவட்டம், உதவி பேராசிரியா்கள் கோவிந்தன், 99422 79190, சசிகுமாா், 97867 92696, 87784 96406 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயமுத்தூா் - 641 003, ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சந்திரசேகரனை 94864 18694, 0422-6611229 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.