

மாடரஅள்ளி கிராமத்தில் கட்டப்பட்ட குடிநீா் மேல்நிலை தொட்டியை, அ.செல்லக்குமாா் எம்.பி. வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள மாடரஅள்ளி கிராமத்தில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க மேல்நிலை குடிநீா் தொட்டி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அ.செல்லக்குமாா் எம்.பி. திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி கதிா்வேல், வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ் குமாா், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளா் வடிவேல், இளைஞா் அணி பொதுச் செயலாளா் விக்னேஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.