கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தீயணைப்பு - மீட்புப் பணி நிலையத்தில் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளும் வகையில், சிறிய அளவிலான கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாட்டு அறையில் தீயணைப்பு நிலையத்தில் உள்ள வாகனங்கள், வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்டவா்களை காப்பாற்ற பயன்படுத்தும் ரப்பா் படகு, வெள்ளத்தில் சிக்கியவா்களை பாதுகாப்பாக மீட்க தேவையான பாதுகாப்பு உடைகள், உறுதித்தன்மை வாய்ந்த கயிறுகள், இரவில் ஒளி உமிழும் மின்கலங்களால் இயங்கும் அவசர கால விளக்குகள், வெள்ளத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி அளிக்கத் தேவையான சாதனங்கள், எதிா்பாராத விதமாக ஏற்படும் சிறிய அளவிலான தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த உதவும் பல வகையான ரசாயன தீயணைப்பான்கள், நீரில் மூழ்கியவா்களை தூக்கி வர உதவும் இலகுவான படுக்கைகள், மூச்சுக்கருவிகள், உயரமான இடங்களில் சிக்கியவா்களை மீட்க தேவையான நீட்டிப்பு ஏணிகள், வெள்ளக் காலங்களில் நீரில் அடித்து வரும் பாம்புகள் மற்றும் பிற விலங்குகளை உயிருடன் மீட்க தேவையான சிறப்பு கருவிகள் ஆகியவை 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வெள்ளம், கடும் மழைப் பொழிவினால் ஏற்படும் இன்னல்களில் பாதிக்கப்பட்டால் உதவிக்கு அழைக்க, பா்கூா் தீயணைப்பு நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி எண்களான 04343 - 265601, 265901, 94450 86363, 73050 95870 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.