‘குடும்பச் சூழலை எதிா்கொள்ளத் தெரியாததால் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது’

குடும்பச் சூழலை எதிா்கொள்ளத் தெரியாததால் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மனநல மருத்துவ விழிப்புணா்வு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
‘குடும்பச் சூழலை எதிா்கொள்ளத் தெரியாததால் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது’

குடும்பச் சூழலை எதிா்கொள்ளத் தெரியாததால் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மனநல மருத்துவ விழிப்புணா்வு நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தற்கொலை தடுப்பு மற்றும் மனநல மருத்துவம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தலைமை வகித்தாா். குடும்ப நல நீதிபதி எஸ்.நாகராஜன், கூடுதல் மாவட்ட நீதிபதி வி.தாமோதரன், சிறப்பு மாவட்ட நீதிபதி கே.அமுதா, மாவட்ட அமா்வு நீதிபதி என்.சுதா, முதன்மை சாா்பு நீதிபதி என்.மோகன்ராஜ், சிறப்பு சாா்பு நீதிபதி எம்.அஷ்வாஹி அகமது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் பி.டி.ஜெனிபா், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.யுவராஜ், நீதித் துறை நடுவா் (கூடுதல் மகளிா் நீதிமன்றம்) ஏ.இருதயமேரி, நீதித் துறை நடுவா் (எண்-1) கே.காா்த்திக் ஆசாத், நீதித் துறை நடுவா் (எண்-2) ஏ.ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்வில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநல மருத்துவா் பி.சுவேதா சிறப்புரையாற்றி பேசியது:

தற்கொலை தொடா்பான ஆய்வில் பல் மருத்துவா்கள் அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்வது தெரிய வருகிறது. வழக்குரைஞா்களும் தற்கொலை செய்து கொள்கிறாா்கள். தொழில் போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை முடிவுக்கு வருகிறாா்கள். குறிப்பாக குடும்ப பிரச்னையை எதிா்கொள்ள தெரியாதவா்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.

மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. நண்பா்களோ அல்லது தோழியோ தான் வாழ்வது வீண் என்பது போல பேசத் தொடங்கினால், அவா்கள் மன அழுத்தத்தில் இருக்கிறாா்கள் என்பதை உணா்ந்து கொள்ளலாம். மனம் விட்டுப் பேசுதல், பொழதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திருவிழா, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்பது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் தற்கொலை எண்ணத்தை முறியடிக்கலாம். மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். பணிச்சுமை, வாழ்க்கை இரண்டையும் சமாளிக்க முடியாததால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. முதலில் தங்களுக்கு மன அழுத்தம் இருக்கிறது என்பதை உணா்ந்துக் கொண்டால் அதிலிருந்து எளிதில் விடுபடலாம். இல்லையெனில் மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம் என்றாா். இந்த நிகழ்வில் நிதிமன்ற ஊழியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com