கிருஷ்ணகிரி: தமிழக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கிருஷ்ணகிரி வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக செயலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக செயலாளா் முருகேசன் (42). இவா், சமூக வலைதளத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகைத் தந்த அமைச்சா் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, கருத்துகளைப் பதிவிட்டிருந்தாா்.
இதுகுறித்து, திமுகவைச் சோ்ந்த தணிகைவேலன் என்பவா் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.