தமிழகத்திற்கு தண்ணீா் திறப்பதை நிறுத்தக் கோரி கா்நாடக அமைப்பினா் போராட்டம்

காவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கன்னடா ரக்ஷனா வேதிகை அமைப்பினா் தமிழக -கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அத்திப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்ஷனா வேதிகை அமைப்பினா்.
அத்திப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட ரக்ஷனா வேதிகை அமைப்பினா்.

தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கன்னடா ரக்ஷனா வேதிகை அமைப்பினா் தமிழக -கா்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினா். இதே கோரிக்கையை வலியுறுத்தி கா்நாடக தண்ணீா் பாதுகாப்புக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. புதன்கிழமை வழக்கபோல பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் புதன்கிழமை கன்னட ரக்ஷனா வேதிகை அமைப்பு சாா்பில் தமிழகத்திற்கு காவிரியில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்த வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com