ஊத்தங்கரை இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் அமைச்சா் ஆய்வு
ஊத்தங்கரையை அடுத்த கேத்துநாயக்கன்பட்டியில் பாம்பாறு அணை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தாா்.
ரூ. 23 லட்சத்தில் 4 வீடுகள் கொண்ட ஒரு தொகுப்பு வீடு என 52 வீடுகள் ரூ. 2,96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு முன்னிலையில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் கூறியதாவது:
முதல்வா் மு.க.ஸ்டாலின் முயற்சியால் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் உள்ளவா்களுக்கு சிறப்பான முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருசில மாதங்களில் இப் பணிகள் நிறைவடையும். திமுக ஆட்சியில்தான் இலங்கைத் தமிழா் மக்களுக்கு கல்வி, அடிப்படை வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன என்றாா்.
ஒன்றியக் குழு தலைவா் உஷாராணி குமரேசன், திமுக ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு மூன்றம்பட்டி குமரேசன், மத்திய எக்கூா் செல்வம், தெற்கு ரஜினி செல்வம், மாநில மகளிா் ஆணைய குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி, ஊரக வளா்ச்சி மற்றும் முகமையின் செயற்பொறியாளா் மலா்விழி, உதவி செயற்பொறியாளா் துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தவமணி, பாலாஜி, மாவட்ட குழு உறுப்பினா் கதிரவன், ஊராட்சி மன்ற தலைவா் பூபாலன் உள்ளிட்டோா் ஆய்வின் போது உடனிருந்தனா்.

