தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி  ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோ
தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோ

ஊத்தங்கரையில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Published on

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஊத்தங்கரையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கொங்கு நாடு மக்கள் தேதிய கட்சியின் மாவட்டச் செயலாளா் வஜ்ஜிரவேல் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை வடக்கு ஒன்றியச் செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். ஊத்தங்கரையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான், தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட கொங்கு பேரவைத் தலைவா் இளையராஜா, மாவட்ட துணை தலைவா் தண்டபாணி, கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேஷ், மேற்கு ஒன்றிய பொருளாளா் செந்தில்குமாா், வடக்கு ஒன்றிய பொருளாளா் சதீஷ்குமாா், நகர செயலாளா் வெங்கடேசன் உள்பட பலா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com