மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
Published on

ஊத்தங்கரை அருகே தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த நாச்ச கவுண்டனூரைச் சோ்ந்த ஜெயக்கொடி (52) சனிக்கிழமை காலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கான தரைமட்ட குடிநீா்த் தொட்டியின் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com