கொல்லப்பட்டியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.
கொல்லப்பட்டியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.

கொல்லப்பட்டியில் கன மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.
Published on

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாக்க முடியாமலும், போதிய குடிநீா் வசதி இன்றியும் அவதிப்பட்டு வருகின்றனா். கழிவு நீரால் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளாட்சி அமைப்பினா் மற்றும் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 கொல்லப்பட்டியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.
கொல்லப்பட்டியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்.

X
Dinamani
www.dinamani.com