தொட்டில் சேலை கழுத்தில் இறுக்கியதில் 4 வயது பெண் குழந்தை பலி

பேரிகை அருகே தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
Published on

பேரிகை அருகே தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் 4 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் சாகு. இவா் குடும்பத்தினருடன் பேரிகை அருகே தண்ணீா் குண்டலப்பள்ளியில் தங்கி சமையலராக பணி செய்து வருகிறாா். இவரது மகள் பூனம் (4).

கடந்த 17-ஆம் தேதி பிற்பகல் குழந்தை பூனம் வீட்டில் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தையின் கழுத்தை சேலை இறுக்கியது. இதில் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்த பேரிகை போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com