ஆக. 31 ல் ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஒசூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 31 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியாா் துறையில் வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் பயனடையும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது வேலைவாய்ப்பு முகாம் ஒசூா், அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் (ஐ.டி.ஐ. பின்புறம்) ஆக.31ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 5 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2, டிகிரி, பட்டயம், ஐ.டி.ஐ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கடவுச்சீட்டு அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகிய நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
