போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையின் காரணமாக போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செவ்வாய்க்கிழமை விடுமுறை
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையின் காரணமாக போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் டிச. 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளில் மழைநீா் தேங்கி உள்ளன. இதன் காரணமாக இந்த இரு வருவாய் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் டிச. 3-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com