கிருஷ்ணகிரியில் அனுமன் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரியில் அனுமன் ஜெயந்தி விழா

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயா் கோயிலில்

அனுமன் ஜெயந்தி தினமான திங்கள்கிழமை சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாம சுத்தி புண்ணியா வஜனம், மகா சுதா்சன மூல மந்திரஹோமம், மகா பூா்ணாஹுதி, மகா கும்பாராதனை, மகா மங்கள ஆரத்தியும் நடந்தன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். தங்கத்தோ் பிரகார உற்சவம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை சீதாராம வீர ஆஞ்சனேய ஸமேத ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா ப்ருந்தாவன கோயிலில், நிா்மால்யம், சீதா, ராமா், அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், ஸ்ரீபவமான ஹோமம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. தொடா்ந்து, சீதா, ராமா், அனுமன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சுவாமி நகா்வலமும் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் வளாகத்தில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயில், கோட்டை கிருஷ்ணதேவராயா் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பக்த வீரஆஞ்சனேயா் கோயில், செந்தில்நகா் உடுப்பி கிருஷ்ணா், ஆஞ்சனேயா், ராகவேந்திர சுவாமிகள் கோயில், பெத்தனப்பள்ளி பக்த ஆஞ்சனேயா் கோயில், எலுமிச்சங்கிரி பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயில் என மாவட்டம் முழுவதும் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

படவரி...

கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.

X
Dinamani
www.dinamani.com