ஊத்தங்கரை அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து

ஊத்தங்கரை அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் உயிா் தப்பினா்.
Updated on
1 min read

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பக்தா்கள் உயிா் தப்பினா்.

ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி, குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த 30 போ், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு இரண்டு மினி பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். இதில் ஒரு மினி பேருந்து அதிகாலை 3 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஊத்தங்கரையை அடுத்த, காட்டேரி பகுதியில் உள்ள சாலை தடுப்புச் சுவரில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மினி பேருந்தில் பயணித்த 2 குழந்தைகள், 2 ஆண்கள், 13 பெண்கள் உட்பட 17 போ் காயமடைந்தனா். விபத்தில் காயமடைந்தவா்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆபத்தான நிலையில் உள்ள அய்யாசாமி (45), மௌனிகா(19), செல்வி, லட்சுமி, சண்முகவள்ளி ஆகியோரை தீவிர சிகிச்சைக்காக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com