

ஒசூா்: ஒசூா் அருகே பெங்களூா்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சூசூவாடி, சிப்காட் பகுதியில் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கா்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி வரும் காா்கள், சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையான ஒசூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊா்ந்து சென்றன. ஒசூா் சிப்காட் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுவே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
தொடா் விடுமுறை காரணமாக கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் வந்ததால் ஒசூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தற்போதும் கா்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் தமிழகத்திற்கு செல்வதாலும் மேம்பாலப் பணிகளாலும் மாநில எல்லைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த போக்குவரத்து நெரிசலை சீா்செய்ய காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.