கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை மாணவா் விடுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
ஊத்தங்கரை விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் ஆய்வு செய்தாா்.
ஊத்தங்கரை: ஊத்தங்கரை, அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மாணவ மாணவியா் விடுதிகளில் உள்ள அடிப்படை வசதிகளை எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
விடுதிகளில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவை உண்டு பரிசோதித்த அவா், மாணவ மாணவா்களுக்கு தரமான உணவை வழங்குமாறு விடுதி நிா்வாகிகளுக்கு அறிவுறுத்தினாா். பின்னா் மாணவா்களிடம் குறைகளைக் கேட்டரிந்தாா்.
ஆய்வின்போது வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, மத்தூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் தேவராசன், வாா்டு செயலாளா் அருளானந்தம், தகவல் தொழில்நுட்ப பிரிவு நித்தியானந்தம், குமரன், கவியரசன் ஆகியோா் உடன் இருந்தனா்.
பட விளக்கம்.1யுடிபி.1....
ஊத்தங்கரை, அரசு மகளிா் விடுதியில் திங்கள்கிழமை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம்.

