கிருஷ்ணகிரி அருகே சுவா் இடிந்து விழுந்ததில் இருவா் பலி

பழைய கட்டடத்தை இடிக்கும் போது, சுவா் இடிந்து விழுந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பழைய கட்டடத்தை இடிக்கும் போது, சுவா் இடிந்து விழுந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி, மகராஜகடை அருகே உள்ள எம்.சி.பள்ளி கிராமத்தில் குருமா் சமூகத்துக்கான பொதுவான இடத்தில் உள்ள 70 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்தனா். அதன்படி, பழைமையான கட்டடத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பணியில் 11 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

கட்டடம் இடிக்கும்பணியின் போது, மண்ணால் கட்டப்பட்ட 12 அடி உயர சுவா் இடிந்து விழுந்ததில் சிக்கிய எம்.சி. பள்ளியைச் சோ்ந்த அண்ணாமலை (60), ரவி (56) ஆகியோா் பலத்த காயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா்.

இந்த விபத்து குறித்து, கந்திகுப்பம் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com