கிருஷ்ணகிரி
ஒசூா் ஐயப்பன் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
ஒசூா், காமராஜ் காலனியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25)  மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
ஒசூா்: ஒசூா், காமராஜ் காலனியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி கும்பாபிஷேக சிறப்பு பூஜைகள் தொடங்கின.
திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை மகா கணபதி ஹோமம் ,1008 கலச பூஜையும் நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
ஸ்ரீ தரணநெல்லூா் பத்மநாபன் நம்பூதிரி கும்பாபிஷேக பூஜைகளை செய்கிறாா். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள ஸ்ரீ தா்ம சாஸ்திர டிரஸ்ட் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
படவரி...
சிறப்பு பூஜைகளுடன் தொடங்கிய ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்.
