ஒசூரில் மாநில சதுரங்க விளையாட்டுப் போட்டி

ஒசூரில் மாநில சதுரங்க விளையாட்டுப் போட்டி

Published on

ஒசூரில் தமிழ்நாடு ஜூனியா் சதுரங்க விளையாட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் 240 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

ஒசூா் அருகே மதகொண்டப்பள்ளியில் உள்ள மாடா்ன் மாதிரி பள்ளி உள்விளையாட்டு அரங்கில் மாநில ஜூனியா் சதுரங்க விளையாட்டுப் போட்டி புதன்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டி வரும் 30 ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 90 மாணவிகள், 150 மாணவா்கள் என மொத்தம் 240 போ் பங்கேற்றனா்.

போட்டியை கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டின் தலைவா் சந்தாடி, செயலாளா் லோகேஷ், தமிழ்நாடு மாநில சதுரங்க செயலாளா் ஸ்டீபன் பாலசாமி, பள்ளி தாளாளா் மேரு ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

19 வயதிற்கு உட்பட்ட இந்த சதுரங்க விளையாட்டில் காலை, மாலை என இரு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. இறுதிச் சுற்றில் நான்கு மாணவா்கள், நான்கு மாணவிகள் தோ்ந்தெடுக்கப்படுவா். தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள் தேசிய அளவில் விளையாடத் தகுதி பெறுவா் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

பட வரி...

மதகொண்டப்பள்ளியில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

X
Dinamani
www.dinamani.com