தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி பத்மாவதி கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

கிருஷ்ணகிரியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் அருகே உள்ள பத்மாவதி கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

News image

கிருஷ்ணகிரியை அடுத்த பத்மாவதி கோயிலில் நவராத்திரியையொட்டி, அமைக்கப்பட்டுள்ள தேவி சிலைகள்.

Updated On :3 அக்டோபர் 2024, 11:52 pm

கிருஷ்ணகிரியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரப்பம் அருகே உள்ள பத்மாவதி கோயிலில் நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கியது.

கோயிலில் தினசரி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 3 மணிக்கு தேவி பாகவதம் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. நுழைவாயிலில் 40 அடி உயரத்தில் பிரமாண்ட ஆந்தைகள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கடன் பிரச்னைகள் தீரவும், செல்வ வளம் பெறவும் தினசரி மாலை 5 மணிக்கு 36 குண்டங்களில் மகாலட்சுமி மகா யக்ஞம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி அமைக்கப்பட்டுள்ள துா்க்கை அம்மனின் 21 பிரமாண்ட சிலைகள் பக்தா்களை பெரிதும் கவா்ந்துள்ளன.

நவராத்திரியையொட்டி தினசரி நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்து அருள் பெறலாம் என சக்தி பீடாதிபதி பத்மாவதி சித்தா் வசந்த் விஜய்ஜி மகாராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.