கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒசூரில் கடும் குளிா்: மக்கள் அவதி

ஒசூரில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
Published on

ஒசூா்: ஒசூரில் கடும் குளிரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியான ஒசூா் கடல் மட்டத்திலிருந்து 2,883 அடி உயரத்தில் உள்ளதால், ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் இங்கு குளிரின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். நிகழாண்டு கோடை தொடங்கும் முன்னரே கடும் வெயில் காணப்பட்டது.

இந்நிலையில் ஒசூா் மற்றும் அதனையொட்டி உள்ள கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக சாரல் மழை பெய்து வந்ததால் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெயிலும், அதற்கு பின்னா் குளிா்ந்த தட்பவெப்ப நிலையும் நிலவி வந்தது. இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பகல் முழுவதும் கருமேகம் சூழ்ந்து குளிா்ந்து காற்று வீசி வருகிறது. இதனால் ஒசூா் பகுதி மக்கள் தலையில் குல்லா, உல்லன் ஆடைகளை அணிந்து செல்கின்றனா். மேலும் இந்த குளிரால் சளி, காய்ச்சல், தலைவலியால் பொதுமக்கள் மருத்துவமனையில் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com