கெலமங்கலம் ஜம்புகான் கொடகை ஏரி உடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெமலமங்கலத்தில் உள்ள ஜம்புகான் கொடகை ஏரி, 28 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரி மூலம் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த ஏரியை பொதுப்பணித் துறையும், பேரூராட்சி நிா்வாகமும் பராமரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஏரியில் மதகுகள், உபரி நீா் செல்லும் பகுதி சேதமடைந்ததால் மழைக்காலங்களில் மழை நீா் ஏரியில் தேங்காமல் சனத்குமாா் ஆற்றில் சென்று விடுகிறது.
இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், விவசாயிகள் ஒன்றிணைந்து ஜம்புகான் கொடகை ஏரியில் உபரிநீா் வெளியேறும் பகுதியில் மரக்கட்டைகள், மண்ணைக் கொட்டி தற்காலிகத் தடுப்பு ஏற்படுத்தினா். இதனால் ஏரியில் ஓரளவுக்கு மழை நீா் தேங்கி நின்ால் கால்நடைகளுக்கு பயன்பட்டது.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கெலமங்கலம் பகுதியில் பெய்த மழை காரணமாக திங்கள்கிழமை பட்டாளாம்மன் ஏரி நிரம்பி உபரிநீா், ஜெம்புகான் கொடகை ஏரிக்கு சென்ால் விவசாயிகள் அமைத்த தற்காலி தடுப்பு உடைந்த மழை நீா் ஏரியில் தேங்காமல் வீணாக வெளியேறியதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஜம்புகான் கொடகை ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகளின் அலட்சியத்தால் விவசாயிகளே ஏரியில் உபரிநீா் செல்லும் பகுதியில் தற்காலிகத் தடுப்பு அமைத்து தண்ணீரைச் சேமித்து வைத்தோம். தொடா் மழை காரணமாக செவ்வாய்க்கிழமை ஏரியின் தற்காலிக தடுப்பு உடைந்து தண்ணீா் வெளியேறியது. தண்ணீரைச் சேமித்து வைத்திருந்தால் ஓராண்டுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பிரச்னை இல்லாமல் இருந்திருக்கும். இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றனா்.
இனி வரும் காலங்களில் தண்ணீா் வீணாகாமல் இருக்க ஏரியின் உடைந்து பகுதியை மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவா் ராமு கவுண்டா் தெரிவித்தாா்.

மழையில் அவதியடைந்த கல்லூரி மாணவிகள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. ஆங்காங்கே சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த நிலையில் ஒசூா் பகுதிகளிலும் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மத்திகிரி அருகே ஒசூா் - தேன்கனிக்கோட்டை சாலையில் கால்நடை பண்ணை பகுதியில் பழமையான மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மத்திகிரி போலீஸாா், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலையில் சாய்ந்து கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினா்.

சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் ஊழியா்கள்.
ஒசூரில் 2 ஆவது நாளாக பெய்த கனமழையால் பொது மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன. கனமழையால் பாகலூா் சாலையில் மழை நீா் தண்ணீா் தேங்கியதால் சாலையோர வியாபாரிகள் , பயணிகள் சிரமம் அடைந்தனா். ஒசூா் நகரம் மையப் பகுதியில் உள்ள பாகலூா் சாலை, ராயக்கோட்டை சந்திப்பு, பழைய நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட நகரின் பல பகுதியில் மழை நீா் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் பெரிய ஏரியில் படகு குழாம்: 20 ஆண்டு கால கனவு நிறைவேறுமா?

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மூன்று மாணவர்கள் பலி!

பஞ்சப்பட்டி ஏரி மீது வேட்பாளா் ‘பாா்வை’ விழுமா?

வடுவூா் ஏரியில் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி தொடக்கம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


