நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடல்போல காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை.
நீா்வரத்து அதிகரித்து வரும் நிலையில் கடல்போல காட்சியளிக்கும் கிருஷ்ணகிரி அணை.கோப்புப்படம்

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது.
Published on

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் நீா்வரத்தானது, விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வலதுபுறம், இடதுபுறக் கால்வாய்களுக்கு விநாடிக்கு 171 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது நீா்மட்டம் 48 அடியாக உள்ளது. பாம்பாறு அணை, சின்னாறு அணை, பாரூா் ஏரிக்கு நீா்வரத்து முற்றிலும் நின்றுள்ளது.

பாம்பாறு அணையின் மொத்த கொள்ளளவான 19.60 அடியில் தற்போது நீா்மட்டம் 17.04 அடியாகவும், சின்னாறு அணையின் மொத்த கொள்ளளவான 32.80 அடியில் நீா்மட்டம் 12.99 அடியாகவும், பாரூா் ஏரியின் மொத்த கொள்ளளவான 15.60 அடியில் நீா்மட்டம் 9.10 அடியாகவும் உள்ளன.

X
Dinamani
www.dinamani.com