வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அமைச்சா் பொன்முடியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

தமிழக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்பினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 5:57 pm

Din

கிருஷ்ணகிரி: தமிழக அமைச்சா் பொன்முடியைக் கண்டித்து கிருஷ்ணகிரியில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம் அமைப்பினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட மாத்ருசக்தி அமைப்பாளா் உஷா வரவேற்றாா். மாவட்டத் தலைவா் திலீப்குமாா், மாவட்டச் செயலாளா் மஞ்சு, பஜ்ரங்தள மாநில அமைப்பாளா் கிரண், மாத்ருசக்தி மாநில அமைப்பாளா் ஜெயந்தி சுரேஷ், மாநில செயலாளா் விஷ்ணுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் அமைச்சா் பொன்முடியைக் கண்டித்தும், அவரை அமைச்சா் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.