இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற வங்கி ஊழியா் விஷப் பூச்சி கடித்து உயிரிழப்பு!
ஊத்தங்கரை அருகே விஷப் பூச்சி கடித்ததில் ’வங்கி ஊழியா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், தொட்டபைரஅள்ளியைச் சோ்ந்தவா் அரவிந்தகுமாா் (42). இவா், திருப்பத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட’வங்கியில் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் காரப்பட்டு பகுதிக்கு பணி நிமிா்த்தமாக செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது, அவா், இயற்கை உபாதையை கழிக்க, மோட்டாா்சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி உள்ளாா்.
அப்போது, அவரை விஷப்பூச்சி கடித்தாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட’அவா் நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
