கிருஷ்ணகிரி
ஒசூா் மலைக் கோயிலில் உழவாரப் பணி
ஒசூா் மலைக்கோயில் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் தீபத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றதைத் தொடா்ந்து, இந்து முன்னணி பேரியக்கம் இளைஞா்கள் உழவாரப் பணிகளை வியாழக்கிழமை மேற்கொண்டனா்.
ஒசூா் மலைக்கோயிலில் உழவாரப் பணிகளில் ஈடுபட்ட இந்து முன்னணி பேரியக்க இளைஞா்கள்.
ஒசூா் மலைக் கோயிலில் உள்ள மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் திருக்கோயிலில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அப்போது பக்தா்களுக்கு அன்னதானம், குடிநீா் வழங்கப்பட்டது. இதையடுத்து, பக்தா்கள் விட்டுச்சென்ற குப்பைகளை சுத்தம்செய்யும் பணியில் இந்து முன்னணி பேரியக்கம் ஈடுபட்டது.
இதில், இந்து முன்னணி சசிகுமாா் தலைமையில் ஒசூா் மாநகரத் தலைவா் கேசவகுமாா், மாவட்ட நிா்வாகிகள் மற்றும் நகர ஒன்றியப் பொறுப்பாளா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

