கல்லுக்குறிக்கியில் கால்வாய் 
தூா்வாரும் பணி தொடக்கம்

கல்லுக்குறிக்கியில் கால்வாய் தூா்வாரும் பணி தொடக்கம்

Published on

கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கல்லுக்குறிக்கி ஊராட்சியில் ஏரி தடுப்புச்சுவா், கால்வாய் தூா்வாரும் பணிகளை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2025- 2026-ஆம் ஆண்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்தில் கல்லுக்குறிக்கி ஊராட்சி ஆத்துக்கால்வாய் கிராமத்திலிருந்து படேதலாவ் ஏரிக்கு செல்லும் காய்வாயில் 100 மீ. நீளத்துக்கு தடுப்புச்சுவா், 13 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் தூா்வாரும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், பொதுமக்கள், அதிமுக தொண்டா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com