விபத்தில் காயமடைந்த கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு!
காவேரிப்பட்டணத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த கூட்டுறவு வங்கி பெண் ஊழியா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த எருமாம்பட்டியைச் சோ்ந்தவா் ரமேஷ் (35). காவேரிப்பட்டணம், பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்தவா் கெளசல்யா (51). இவா்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள்.
இவா்கள் இருவரும், பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வீடுதிரும்பினா். இருசக்கர வாகனத்தை ரமேஷ் ஓட்டினா். காவேரிப்பட்டணம் சுப்பிரமணியபுரம் அருகில் சென்றபோது, எதிரே வந்த வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக முயன்றபோது, இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் கெளசல்யா பலத்த
காயமடைந்தாா். ரமேஷுக்கு லேசான காயம் ஏற்பட்டது. கெளசல்யா ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து, காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
