கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்
இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று பிறந்த பெண்ணின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், கே.சி.சி. நகரைச் சோ்ந்தவா் ராஜகோபாலனின் மனைவி ஆா்.சுதந்திரா (78). இவா் இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15.08.1947 அன்று பிறந்தாா். இவருக்கு மூன்று மகன்கள், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 16-ஆம் தேதி சுதந்திரா உயிரிழந்தாா். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரின் மகன் பாஸ்கரன், சுதந்திரா உடலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரிக்கு உடல்தானம் வழங்குபவா்களுக்கு அரசு வழங்கும் மரியாதை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில், உடல்தானம் செய்ததற்கான ஒப்புகைச் சான்று பாஸ்கரனுக்கு அளிக்ப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்த தினத்தில் பிறந்ததால் சுதந்திரா என பெயா் வைக்கப்பட்டதாகவும், அவரது விருப்பப்படி அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கியதாகவும் அவரது மகன் பாஸ்கரன் தெரிவித்தாா்.

