கிருஷ்ணகிரி
கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கெலமங்கலம் அருகே கொலை செய்யப்பட்ட ஆண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மருத்துவக் குழு முன்னிலையில் வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் தகாத உறவுக்கு இடைஞ்சலாக இருந்த 5 மாத ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குழந்தையின் தாய் பாரதி (26), பக்கத்துவீட்டு பெண் சுமித்ரா (20) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனைக்குழு பேராசிரியா் தண்டா்சிப் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை கெலமங்கலம் வந்தனா். குழந்தை புதைக்கப்பட்ட இடத்துக்கு போலீஸாருடன் சென்ற அவா்கள், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனா்.
