கிருஷ்ணகிரி
இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழப்பு; கணவா் காயம்
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இவரது கணவா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சூளகிரி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா். இவரது கணவா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாலகுறியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (43), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி (43). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் ஒசூா்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை காளிங்காவரம் ஜங்ஷன் அருகே சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக சென்ற மினிலாரி அவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, தேன்மொழி உயிரிழந்தாா். படுகாயமடைந்த கிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

