கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
Published on

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் 3 ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் பெருமாள், செயலாளா் சிவாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை உயா்ந்துள்ளதால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும். கால்நடை தீவனத்தை தரத்துடன் 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்படன.

மேலும், புதிய நிா்வாகிகளாக 25 போ் கொண்ட மாவட்ட குழுவும், 7 போ் கொண்ட மாவட்ட நிா்வாகிகள் குழுவும் தோ்வு செய்யப்பட்டன. அதன்படி, சங்கத்தின் மாவட்டத் தலைவராக சக்தி, செயலாளராக அண்ணாமலை, பொருளாளராக முனிராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com