கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் மனித உரிமைகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதன்மையா் சத்யபாமா தலைமை வகித்து, மனித உரிமைகள் தின உறுதிமொழியை வாசித்தாா். கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் என 400 க்கும் மேற்பட்டோா் உறுதிமொழி ஏற்றனா். அதன்பிறகு மனித உரிமைகள் ஆணையம் குறித்த சுருக்கமான குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடா்ந்து, நிகழ்வாண்டில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கல்லூரியில் சோ்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மருத்துவக் காண்காணிப்பாளா் சந்திரசேகரன், துணை முதல்வா் சாத்விகா, உள்ளிருப்பு மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், மது, நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com