ஜிஞ்சுப்பள்ளியில் ரூ. 12.85 கோடியில் நவீன நெல் சேமிப்பு வளாகம்: காணொலி வாயிலாக முதல்வா் அடிக்கல்நாட்டினாா்

ஜிஞ்சுப்பள்ளியில் ரூ. 12.85 கோடியில் நவீன நெல் சேமிப்பு வளாகம்: காணொலி வாயிலாக முதல்வா் அடிக்கல்நாட்டினாா்

ஜிஞ்சுப்பள்ளியில் ரூ. 12.85 கோடியில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல்நாட்டினாா்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிஞ்சுப்பள்ளியில் ரூ. 12.85 கோடியில் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை அடிக்கல்நாட்டினாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ஜிஞ்சுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், எம்எல்ஏக்கள் தே. மதியழகன் (பா்கூா்), ஒய். பிரகாஷ் (ஒசூா்) ஆகியோா் பூமிபூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

ஜிஞ்சுப்பள்ளியில் 10 ஏக்கரில் ரூ. 12.85 கோடியில் தலா 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வளாகம் என மொத்தம் 9 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கான பணிகள் தொடங்கப்படுகின்றன.

இந்த வளாகத்தில் அலுவலக கட்டடம், சுமை தூக்கும் பணியாளா்களுக்கான அறைகள், காவலா் அறை, சுற்றுச்சுவா் அமைக்கப்படுகிறது. மேலும், ஆழ்துளைக் கிணறு, புதிய சாலை அமைக்கம் பணிகள் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, நெல் சேமிப்பு பயன்பாட்டிற்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல பொது மேலாளா் தணிகாசலம், முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், கிடங்கு துணை மேலாளா் சசிக்குமாா், தரக்கட்டுப்பாடு உதவி மேலாளா் வில்சன், உதவி பொறியாளா் பிரியா, வட்டாட்சியா் ரமேஷ், நகராட்சி துணை தலைவா் சாவித்திரி உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com