கிருஷ்ணகிரி
திருப்பரங்குன்ற விவகாரம்: ஒசூரில் விசுவ ஹிந்து பரிஷத் சாா்பில் முருகன் கோயில்களில் வழிபாடு
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க வேண்டி ஒசூரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் முருகன் கோயிலில் 108 தேங்காய்களை உடைத்து புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க வேண்டி ஒசூரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினா் முருகன் கோயிலில் 108 தேங்காய்களை உடைத்து புதன்கிழமை வழிபாடு நடத்தினா்.
ஒசூா் பெரியாா் நகரில் உள்ள வேல்முருகன் கோயிலில் அகில இந்திய விசுவ ஹிந்து பரிசத் அமைப்பின் வட தமிழக இணை செயலாளா் விஷ்ணுகுமாா், பஜ்ரங் தள் மாநில அமைப்பாளா் கிரண் ஆகியோா் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க வேண்டி கந்த சஷ்டி கவசத்தை பாடினா். தொடா்ந்து 108 தேங்காய்கள் உடைத்து வழிபாடு நடத்தினா்.
நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோயில் முன் அனைவரும் முழுக்கங்களை எழுப்பினா்.