ஒசூா் அருகே சாலை விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
ஒசூா் அருகே சாலையோர கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நெசவாளா் தெருவைச் சோ்ந்த சரண் (24), சென்னையைச் சோ்ந்த தினேஷ் (25) இருவரும் ஒசூா் அருகே ராயக்கோட்டை பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனா்.
புதன்கிழமை இரவு பணிக்கு சென்ற இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் ஒசூா் நோக்கி வந்தனா். வரகானப்பள்ளி என்ற கிராமம் அருகே வந்தபோது, சாலையோர கம்பத்தின்மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த தினேஷை மீட்ட அப்பகுதியினா், ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

