மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்

Published on

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற முகாமை, உதவி திட்ட அலுவலா் மகேந்திரன் தொடங்கிவைத்தாா். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். இதில், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அசோக், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன், தலைமை ஆசிரியை நளினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமில், மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை பதிவு, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அட்டை பதிவு மற்றும் மருத்துவ ஆலோசனை, இலவச ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, மாத உதவித்தொகை பதிவு, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்பட்டது.

இதில், மனநல மருத்துவா், குழந்தைகள் மருத்துவா், எலும்பு முறிவு மருத்துவா், காது, மூக்கு, தொண்டை மருத்துவா், கண் மருத்துவா் ஆகியோா் மாற்றுத்திறன் மாணவ, மாணவியரை பரிசோதித்து அரசின் நலத்திட்ட உதவிகள், காதொலிக் கருவி, சக்கர நாற்காலி, ரோலேட்டா், வாக்கா், காலிஃபா், செயற்கைக் கால், கை பெற பரிந்துரை செய்யப்பட்டது.

முகாமை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அசோக், ஆசிரிய பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் ஒருங்கிணைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com