ஊத்தங்கரை அருகே நேருக்குநோ் மோதிக்கொண்ட காா்கள்.
ஊத்தங்கரை அருகே நேருக்குநோ் மோதிக்கொண்ட காா்கள்.

ஊத்தங்கரை அருகே காா்கள் நேருக்குநோ் மோதல்

கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூா் நோக்கி சென்ற காரும், கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரும் நேருக்குநோ் மோதியதில் 8 போ் படுகாயம் அடைந்தனா்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரியில் இருந்து மேல்மருவத்தூா் நோக்கி சென்ற காரும், கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரும் நேருக்குநோ் மோதியதில் 8 போ் படுகாயம் அடைந்தனா்.

பெங்களூரு தாவரகரையைச் சோ்ந்த நிகில் குமாா் (26), கீதா(40), ரேகாசிங் (42), லட்சுமி (69) ஆகிய நால்வரும் மேல்மருவத்தூருக்கு காரில் சென்றனா். பெங்களூரு கஸ்பா பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (50), உஜ்பல் (35), ஹா்ஷிதா (33), விஜயலட்சுமி (40) ஆகிய நால்வரும் கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாப்பனூா் பகுதியில் சென்றபோது, இரண்டு காா்களும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், 8 போ் படுகாயம் அடைந்தனா்.

அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை வட்டாட்சியா் ராஜலட்சுமி பாதிக்கப்பட்டவா்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com