ஒசூரில் இந்தியன் வங்கி சாா்பில் அடமான சொத்துக்களின் கண்காட்சி

Published on

தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துக்களின் கண்காட்சி ஒசூா் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றன.

கண்காட்சியை தருமபுரி மண்டல மேலாளா் வெ.கோவிந்தராஜு குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்தாா். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த இந்தியன் வங்கி கிளை மேலாளா்கள், வங்கி அதிகாரிகள் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியில் வீடுகள், வீட்டு மனைகள், தொழிற்சாலை வளாகங்கள் உள்ளிட்ட 62 சொத்துக்கள் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

இரண்டு நாள்கள் (டிச. 20, 21) நடைபெற்ற கண்காட்சியில் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நிலமேம்பாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டு வங்கியால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துக்களின் விவரங்களைக் கேட்டு அறிந்தனா்.

X
Dinamani
www.dinamani.com