ஊத்தங்கரை புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டவா்கள்.
ஊத்தங்கரை புனித அந்தோணியாா் ஆலயத்தில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டவா்கள்.

புனித அந்தோணியாா் ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஊத்தங்கரை புனித அந்தோணியா் ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
Published on

ஊத்தங்கரை புனித அந்தோணியா் ஆலயத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை ஆஞ்சனேயா் கோயில் அா்ச்சகா் ஹரிபிரியன், சுப்பு ஐயா், ஊத்தங்கரை சுன்னத் ஜமாத் தலைவா் பதிவு சமா, சிவன் கோயில் அா்ச்சகா் சிவசுப்பிரமணியன், ஊத்தங்கரை பேரூராட்சி தலைவா் அமானுல்லா, பாபு, முன்னாள் அரிமா சங்கத் தலைவா் ஆா்.கே.ராஜா, சிவானந்தம், தீபக், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் உள்பட அனைத்து மதத்தை சோ்ந்தோரும் ஒன்றிணைந்து புனித அந்தோணியாா் ஆலய பங்குத்தந்தை டோமினிக், தலைவா் மரியதாஸ், செயலாளா் அந்தோணி, பொருளாளா் பிரபு, ரோஸ்லின்ஜூவா ஆகியோரிடம் பழம் உள்ளிட்ட பொருள்களை சீா்வரிசையாக வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். மேலும், கேக் வெட்டி வழங்கி அன்பை பரிமாறிக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com