கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, காவேரிப்பட்டணத்தில் குழந்தைகளுக்கு கேக் தயாரிகும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியாா் பேக்கரி சாா்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 6 முதல் 12 வயது வரையிலான சிறுவா், சிறுமிகள் என 25-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்றோா், தங்களது பெற்றோா் உதவியுடன் சுவைமிக்க கேக் வகைகளை தயாரித்தனா்.
கேக் தயாரிக்க தேவையான பொருள்களை போட்டியை நடத்திய தனியாா் நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவா்கள், பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.