காலி மது பாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை (டிச. 29) முதல் தொடங்கப்படுகிறது.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டிலுக்கு ரூ. 10 திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை (டிச. 29) முதல் தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளா் செங்கிஸ்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி சுற்றுச்சுழல் மாசுபடுதலை தடுக்கும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் திங்கள்கிழமைமுதல் வாடிக்கையாளா்கள் பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10 கூடுதல் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட காலி பாட்டிலை அதே கடையில் திருப்பிக் கொடுத்து ரூ. 10-ஐ திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com